Thursday, 8 January 2015

முத்துக்குமரா பார் நீ பாரில் தமிழீழ விடுதலை

முத்துக்குமரா...
எங்களுக்காக உன்னுடல்
வெந்தாய்.
விடுதலைக்காய் வித்தானய்.
வெந்தணல் மீது உன்னுடல்.
முத்தே.....
உன் நினைவு எம்மை 
வாட்டுதய்யா!
விடுதலை வித்தே-நீ
ஈழ மக்களின் சொத்தே!

உன் உறவுகள் நாம்.
எம் இனமடா  நீ -நீ
தீ வைத்தது உனக்கல்ல...
பேரினவாத பேரரசுகளுக்கு வைத்தாய்.

ஈகை போராளியே...
உன் ஈகம் தமிழருக்கு
விடுதலை தீயை விதைக்குதடா-பார்
பரவியது தீ பாரெங்கும்...

விடுதலை பெறும் வரை
உன் தீ அடங்குமாய்யா?
எம் மனங்களில் அது விலகுமாய்யா!


பார் நீ பாரில் தமிழீழ விடுதலை... 
வா நீ வந்து பார்..
அதுவரை நாம் ஓயோம்


சரவணை மைந்தன்

1 comment: