எவ்வளவு காலம்.....
விடுதலை வேண்டிய
எம் பயணம்.
கொட்டும் மழை
சுட்டெரிக்கும் வெயில்!
காட்டிலே கருநாகங்கங்கள்
பதுங்கு குழியிலே வெள்ளம்!
வெளியிலோ பணி.....
காவலுக்கு நின்றோம்
கண்ணயர்ந்தது இல்லை.....
கண்ணிவெடி காலிலே-காத்திருக்க
காவல்காத்தோம்!
எப்போ வரும்
எப்படி வரும்
எதுவும் தெரியா!
சீறிவந்து சிவப்பை தரும்
உயிர் கூட போகும்..
இத்தனையும்
எதற்காக ?
விடுதலை எம் தமிழ்
விடுதலை -விடுதலைக்கு
விடு....தலை.
இன்னல்களை பல
இன்றும் தொடருது.
இல்லை விடுதலை
இன்றும் வா - விடு
உன் தலை !
விடுதலை விடுதலை..
சரவணை மைந்தன்

நிகண்டு.காம் புதிய பொலிவுடன் புது சாப்ட்வேர் உடன் புதிய வேகத்தில் இந்த தமிழர் திருநாளில் ஆரம்பமாகிறது. தமிழில் எழுதுபவர்களையும் படிபவர்களையும் இணைக்கும் தளம் நிகண்டு.காம் வழியாக உங்கள் வலைப்பூக்கள்,புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.
ReplyDeleteNallavar lachiyam nichaym niraivaerum. Uravae.
ReplyDelete