Monday, 2 March 2015

விளங்குதா? இக்கவிதை

எப்படி வந்தது -இந்த
பாசம்
எதனால் அடைந்தேன்-இந்த
நேசம்
இனத்தோடு வந்த 
பந்தம்
இரவோடு கரைந்திடுமா?
இலங்கியங்கள் கூறவில்லை 
இதுவரை பார்க்கவில்லை 

எரிந்திடும் இந்த உடல்
புதைந்திடும் செத்த சடம்
இருப்பதோ ஒற்றை அன்பு
உணர்ந்திடும் உள்ளம்
அதை பற்றிட மறுப்பதேன்?

கேள்விகள் வந்தாலும் 
கவிதைகள் வரைந்தாலும்
கல்விகள் இருந்தும் -பல
கதைகள் அறிந்தும்
மனங்கள் மட்டும்
மாறதோ என் மனிதா?

No comments:

Post a Comment