Thursday, 29 January 2015

முட்டை பொரியலும் பிட்டுக்கும் மஞ்சள் புரியாணி ஈடாகுமா


பிறந்ததும் ஏழைக்குடிசை
தவழ்ந்ததும் மண் தரையில்
இருந்தும் ஏழ்மை தெரியவில்லை 
அன்னை உன்மடி கிடைக்கையில்

இருப்பதும் சுற்றும் நாற்காலி 
கிடப்பதோ பஞ்சு மெத்தை 
இருந்தும் ஏழ்மை தெரிகிறதே 
அன்னை நீ இல்லாமையால்

கல்லில் அடித்து
பனங்கழியில் துவைத்து
வேலியில் உலர வைத்து
அணிந்தேன் ஆடையை

எத்தனை இயந்திரங்கள் 
அத்தனையும் இயக்கி 
ஆடையை அழுத்தி 
உடனே அணிந்தும்
அந்த சுகம்
அன்னையே கிடைக்கவில்லை

பிஸ்சா என்ன
பர்கர் சொல்லி
சோஸ் விட்டு  தந்தாலும்
அம்மியில் அரைத்து 
ஊறப்போட்ட தோசைக்கு
ஈடாகுமா?

முட்டை பொரியலும்
பிட்டுக்கும் 
மஞ்சள் புரியாணி
ஈடாகுமா?




No comments:

Post a Comment