விளைந்த பயிர்
அறுவடையாகும்
மீண்டும் அந்த விதை
பயிராகும்
விடுதலை வீர்ர்கள்
வீழ்ந்தனர் வித்தாக
அவர் எழுவார்
விருச்சமாக
நிச்சயம் இது நடக்கும்
கடல் தன்னில் மழை
கடலை நனைக்காது
எம் மண்ணில் குண்டுகள்
எம் மனதை வதைக்காது
வரும் பகை விரட்ட
கல்லறைகள் கருவறை
தன்னில் பதுப்பிறப்பெடுக்கும்
கடல் அலைகள்
பொங்கி எழும்
காடுகள் உயிர் பெறும்
உடைந்த கல்லறை
எழுந்து இருக்கும்
எதிரி பயந்து ஓடுவான்
தமிழீழம் உயிர் பெறும்
எங்கள் மாவீரர்
கனவுகள். நனவாகும்
சரவணை மைந்தன்
வருக! வாழ்க! வளர்க!
ReplyDelete