வீடற்று இருக்கிறோம்
வீதியிலே
பாதையில் பாறிவிழுந்த
ஆலமரம் நாங்கள்
விழுதுகள் கூட தாங்கவில்லை
வேரறுந்த எம்மை.
விடுதலை வேண்டினோம்
விடியல் வரும் என்று
இந்திய வீடாம் இன்னும் இல்லை
கட்டப்படுகின்றன வீடுகள்
நமக்கல்ல அதுவும் குடியேற்றம்தான்
மீள் குடியேற்றம் இல்லை
மீறப்பட்ட குடியேற்றம்.
சரவணை மைந்தன்
கவிவேந்தன்
No comments:
Post a Comment